Know Thy Self

ali (1) appa (1) baghdad (1) books (1) free (1) gunankudi (1) history (1) hyder (1) kunangudi (1) masthan (1) music (1) of (1) sage (1) sahib (1) sufi (1) sufisky (1) sufism (1)

அருட்போதனை-1



இந்த உலகம் ஒரு நாடக மேடை!
அதில் நாமெல்லாம் நடிகர்கள்! நடிக்கும் நமக்கு பக்கபலமாக இருக்கும் ரசிகர்களே -ஒளலியாக்கள் என்னும் இறைநேசச்செல்வர்கள்!

நாம் தூங்கினோம்!விழித்தோம்!--இதை ஒப்புக்கொள்கிறோம் ஆனால் நாம் இருந்தோம், இருக்கின்றோம்,இனியும் இருப்போம்!--என்பதை நம் மனம் ஏற்க மறுக்கிறது.

இறைவனை அறிய காடு மலை பாறை கடல் நிலம் கடந்து எங்கும் அலைந்து திறியவேண்டிய அவசியமில்லை-- இருப்பவை எல்லாம் நாமாக இருக்கிறோம்--என்று உணர்ந்துகொள்வதே இறைவனை அறியும் ஞானத்தின் முதற்படி!


"இருப்பவை எல்லாம் நாமாக இருக்கிறோம்"-என்ற இந்த புரிந்துணர்தலின் நிலையை எல்லோராலும் அடைய இயலாது!இறைவனை அறிந்து,அவனோடு ஐக்கியப்பட்டுவிட்ட இறைநேசர்களான-ஒளலியாக்களின் துணைகொண்டே அடைய இயலும்!இதற்கு வேறு மார்க்கமும் இல்லை-வேறு வழியும் இல்லை!


பெருமானாரின் பொன்மொழியான இந்த ஹதீஸ் மொழியை கவனியுங்கள்...
"மனிதர்கள் உறங்குகிறார்கள்-மரணம் வரும்போது விழித்துக்கொள்கிறார்கள்"!

--இது இறைவனை மறந்து இம்மையை விரும்பியவர்களின் கைசேத நிலையாகும்!

இந்த கைசேத நிலைக்கு ஆளாகிய மனிதனானவன் ஒரு நொடி"ஆஹா!நாம் இந்த வாழ்கையை வீணடித்துவிட்டோமே!"-என்று மனம் வெதும்பி அடுத்த கணம் இன்னொரு கருவில் சென்று புகுந்து, இந்த உலக சுகதுக்கத்தில் உழலப்போகும் ஒரு மனித ஜீவியாய் மீண்டும் பிறப்பெடுப்பான்!அவன் இறைவனை அறிந்துணரும்வரை மீண்டும் மீண்டும் இவ்வுலகில் பிறப்பெடுத்துக்கொண்டே இருப்பான்!

இதையே இறைவன் தன் திருமறையிலே "நரகத்தில்,அவர்களுக்கு புதுப்புது தோல்கள் அணிவிக்கப்படும்"
என்று கூறுகிறான்!

ஆனால் நீங்கள் இந்த கைசேத நிலைக்கு ஆளாகாமல்,நித்திய ஜீவிகளாய் இருக்க விழையுங்கள்!
உங்களை நீங்களே உணர்ந்து கொள்ள முயர்ச்சி செய்யுங்கள்!


நாம் சிறிய யுத்தத்திலிருந்து பெரிய யுத்தத்திர்க்கு மீள்கிறோம்--என்று பெருமானார்(ஸல்) அவர்கள் கூறியதும் சஹாபாக்கள் என்னும் நபித்தோழர்கள் திகைத்து நின்றனர்!அவர்கள்"மீண்டும் போரா?" என்று வினவியதர்க்கு,நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் "ஆம்!அது நம் மனப்போராட்டம்.
இல்லை-உண்டு,நல்லது-தீயது என்று குழப்பும் நம் மனதை கொன்றுவீழ்த்துவதே அந்த மாபெரிய அறப்போர்"என்று பதிலளித்தார்கள்.

அன்பர்களே! இச்சிக்கும் மனதை கொன்றுவீழ்த்துவது சாதாரன காரியமல்ல!அதற்கு சாந்தியடைந்த,சம்பூரணமான உள்ளம் வேண்டும்! இந்த சாந்தியடைந்த, சம்பூரணமான உள்ளத்தை பெறுவதென்பது-குருமூர்தமானது!

தரீக்கத்-என்று சொல்லக்கூடிய ஞானவழியில் தன்னை அர்பணித்துக்கொண்டு,ஞானாசிரியரின் சொற்படி ஆன்மீகபயிற்சிகளில் ஒருவன் தன் மனதை முழுவதுமாக ஈடுபடுத்திக்கொள்ளும்போதுதான் இந்த சம்பூரணமடைந்த
மனநிலை வாய்க்கும்!


சிலர் இந்த ஜென்மதிலேயே இறைவனை அடைந்து விடவேண்டும் என்று பிதற்றித்திரிகிறார்கள்!
அது தவறு.இந்த முடிவை மனிதர்கள் எடுக்க சக்தியற்றவர்கள்.



அது இறைவனின் சித்தத்திலிருந்துதான் வரவேண்டும்!
"உன்னுடைய விதியானது எழுதி முடிக்கப்பட்டுவிட்டது எழுதிய பேனாவின் முனையும் உடைக்கப்பட்டுவிட்டது"-என்று இறைவன் கூறுவதை கவனியுங்கள்!

மேலும் கெளதுகள் நாயகம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ஆண்டகை அவர்கள் "உன்னுடைய இடத்திலேயே நீ இரு--இறைசித்தம்கொண்டு உன்னை அவ்விடத்திலிருந்து வேரோடு பிடுங்கி வேரிடத்தில் வைக்கும் வரை!"என்று கூறுவதை கவனியுங்கள்!

ஒரு ஞானியிடம்,நீங்கள் இறைவனின் வருகைக்காக கடுந்தவம் புரிகிறீர்கள்,அந்த இறைவன் உங்கள் தவத்தை பொருந்திக்கொண்டு உங்களை ஆட்கொள்ள வருவானா?என்று வினவப்பட்டபோது,
அந்த ஞானி "வந்தா வரான்!வரலென்னா போரான்!" என்று ஏளனமாக பதிலுரைத்தார்கள்!

இறைவனை அடைந்தே தீரவேண்டும் என்று கிடந்து குதிக்கத்தேவையில்லை!ஏனெனில்,இன்றில்லையெனில் இன்னொருநாள்--இந்த ஜென்மமில்லையென்றால் அடுத்த ஜென்மம்!

ஆனால் நாம் அனைவரும் அவனை அடைந்தே தீறுவோம்!
மனித வர்க்கம் படைக்கப்பட்டதன் நோக்கமும் அதுவாகத்தான் உள்ளது! அதற்காக அவனை விட்டும் விலகிவிட வேண்டுமென்றும் நான் உங்களை உபதேசிக்கவில்லை!

ஒரு காதலன் தன் காதலியின் இல்லத்தையே சுற்றிச்சுற்றி வருவதற்கான காரணம்-அவள்,தான் அவளுக்காகவே காத்திருப்பதை அறிந்து ,தன்மீது பரிவுகொண்டு,அவளின் திருமுகத்தை ஒரு முறையேனும் தனக்குக்காட்ட திரையகற்றமாட்டாளா!,என்ற ஆசையினாலேயேயாம்!

மேற்சொன்னது இறைகாதலர்களுக்கும் பொருந்தும்--நாம் இறை இல்லமான 'கஅபா'வை இடம்சுற்றி வலம்,துதிபாடிக்கொண்டே சுற்றி வருவதெல்லாம் அந்த மாபெரியோனின் ஜோதிமுக தரிசனத்துக்காகவேயாம்!

நாம் அவனின் நினைவைவிட்டும் விலகிவிட்டால்,அவனின் 'லிகா' என்னும் அருட்திருக்காட்சி நமக்கு கிடைப்பது எங்கனம்?
ஆக,எப்போதும் இறைதேட்டமுடையவராக இருங்கள்!

இறைவனே தன் திருமறையிலே கூறிகிறான்...
"இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி ஊன சஹாதா"--நாம் அவனிடம்(இறைவனிடம்)இருந்தே வந்தோம் நிச்சயமாக அவனிடமே (இறைவனிடம்) மீளுவோம்!

ஆம்!நாம் ஒவ்வொருவரும் அவனிடமே மீளுவோம்!
அவனையே அடைவோம்!நிச்சயமாக!

No comments:

Post a Comment