அருட்போதனை-2
இறை சந்திப்பு என்பது உயிர்களைத்திற்க்கும் கடமை!நாம் கொண்டிருக்கும் இம்மனிதக்கோலம் இறைவனை அடைய நாம் செய்த பூர்வஜென்ம முயற்சிகளின் ப்ரதிபலிப்பே அன்றி வேரில்லை!
இதை நாம் மேலும் பண்படுதிக்கொண்டு இறைதரிசனப் பாதையில் நம்முடைய முழு முயற்சியை-பங்களிப்பை அளிக்க வேண்டும்.
நம்முடைய கண்மணி நாயகம்(ஸல்) அவர்களின் பொன்மொழி யாதெனில் "இறை சந்திப்பிலன்றி மூமினுக்கு(உண்மை விசுவாசிக்கு) நிம்மதியில்லை"
நாம் கூறும் "அஸ்ஸலாமு அலைக்கும்-இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக"-என்ற இந்த சாந்தியடைந்த நிலை இறைநேசர்களுடையதாய் உள்ளது!
திருக்குர்ஆன் பகர்கிறது "அவர்களை எந்தவித அச்சமும் சோர்வும் பீடிக்கா!" நாமும் அவர்களைப்போல் அச்சமற்றவர்களாய் சாந்தியடைந்தவர்களாய் ஆகிவிடுவதே நம்முடைய இந்த வாழ்வின் இலட்சியமாயுல்லது!
ஆனால் இன்று எத்தனைபேர் இறைநாட்டமுள்ளவராக-நஃப்ஸே காமிலா-என்ற சம்பூரண நிலையை அடைய விழைபவராக இருக்கிறார்கள்!எத்தனைபேர் லிகா என்னும் இறைசந்திப்பிற்காக ஏங்கித்தவிப்பவராக இருக்கிறார்கள்!
வாழ்வின் இலட்சியமே இறைவனின் சந்திப்புதான் என்று சொன்னால் அந்த இறைவனை அடையும் வழி யாது ? அவன் ஆணா?பெண்ணா?அல்லது அலியா? மூசா நபி உரைத்ததுபோல் அவன் அனுபவமா?அல்லது கண்மணி நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதுபோல் அவன் இளம்பெண்ணா? விடைகாணமுடியா இவ்வினாக்களுக்கு விஷயவிளக்கம் தருவதே தரீக்கா-என்னும் ஞானப்பாதைகளின் நோக்கமாயுல்லது!
தரீக்காவில் தன்னை முழுவதுமாக இணைத்துக்கொண்டுவிட்ட சாதகனின் மனதில் அவ்வப்போது எழும் சந்தேகங்களுக்கு அவனுக்கு ஞானதீட்சை (முரீது) வழங்கிய குருவே (ஷெய்கு) விடையளிப்பவராயுள்ளார்!
தன்னுடைய குருவை சகலமுமாக காண்பதே ஓர் உண்மை சீடனின் அடையாளமாகும்!அப்படி அவன் சகலமுமாய் காணும்போது தன் ஷெய்குடைய(குருவின்) ஆன்மாவில் ஃபனா (நாஸ்தி)ஆகி விடுவான்!
எவன் தன் ஷெய்களவில் ஃபனாவாகி விட்டானோ அவன் கண்மணி நாயகம் (ஸல்) அவர்களளவில் ஃபனாவாகிவிடுவான்!
பின்னர் அந்த மாபெரியோனான இறைவன் அந்த அடியானுடைய உருவிலேயே வந்து அவனது 'லிகா' என்னும் அருட்திருக்காட்சியைத் தந்தருள்வான்! இதுவே ஞானத்தில் முற்றிய நிலை!
No comments:
Post a Comment