Know Thy Self

ali (1) appa (1) baghdad (1) books (1) free (1) gunankudi (1) history (1) hyder (1) kunangudi (1) masthan (1) music (1) of (1) sage (1) sahib (1) sufi (1) sufisky (1) sufism (1)

Kunangudi Masthan Sahib Appa Paadalgal

                       
பார்க்கப் பலவிதமாய்ப் பல்வகண்டந் தன்னையடை
காக்குந் திருக்கருணைக் கண்ணே ரகுமானே.

ஈறு முதலுமற்றே யியங்குகின்ற முச்சுடராய்க்
காரணிக்கும் பூரணமே கண்ணே ரகுமானே.

பாணிக்க வொண்ணாப் பதம்பெறுதற் கென்சிரசைக்
காணிக்கை வைத்தேனென் கண்ணே ரகுமானே.

யானைரத மேறு மரசர்பெரு வாழ்வுமுதற்
கானற் சலமன்றோ கண்ணே ரகுமானே.

வீடோவென் தேகம் விழுமிடந்தான் வீதிகளோ
காடோ செடியொவென் கண்ணே ரகுமானே.

ஏங்காம லங்குமிங்கும் மேகாந்த மாகவுனைக்
காண்கவந்து பாங்கருள் செய் கண்ணே ரகுமானே.

தொண்டுசெய்ய நின்ற துறவியர்க ளேயருளைக்
கண்டுகொள்ளக் கண்டாயென் கண்ணே ரகுமானே.

வேட்டை பெரிதென்றே வெறிநாயைக் கைப்பிடித்துக்
காட்டிற் புகலாமோ கண்ணே ரகுமானே.

அடைத்த மனக்கோட்டை யாளுமைந்து கல்வரையுங்
கடத்த முடிவதில்லை கண்ணே ரகுமானே.

ஓயாக் கவலையிணா லுள்ளுடைந்து வாடுதர்கோ
காய மெடுத்தேனென் கண்ணே ரகுமானே.



விளக்கங்களுக்கும் விவரங்களுக்கும்:
    பன்னூலாசிரியர்,
                                       M.A.ஹைதர் அலி யகீனுல்லாஷா,
                                   கலிஃபா காதிரி,ஷத்தாரி,ஷிஷ்தி சர் கலிஃபா ரிஃபாயி,
contact :+91 98947 46014.
email    : mahyderali@yahoo.com
URL: www.netsufi.com